வரும் மே 13-14 ஆம் தேதியை ஒட்டிய நாட்களில் தென் கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு மாலத்தீவு ஒட்டிய கடல் பகுதிகளில் கடல் சார்ந்த நிகழ்வு உருவாகும் வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தென் கேரளா மற்றும் தென் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12-16 தேதி வரையும், வட கேரளா மற்றும் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மே 14-20 ஆம் தேதி வரையிலும் பரவலான கனமழைக்கு வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிகழ்வு நகர்வு மற்றும் இருப்பிடம் & வலுத்தன்மை அடிப்படையில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மிகக்கனமழை பெய்யவும் வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிகழ்வு அருகில் இருக்கும் மே15-20 தேதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30-50 கி.மீ என்ற அளவில் தென் மேற்கு/ மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.

வானிலை நிலையற்றது. மாறக்கூடியது.
வானிலை மாற்றம் இருந்தால் பதிவிடப்படும்.

நன்றி.